Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியன் கிழக்கில் தான் உதிக்கும், சூரியன் தான் ஈரோடில் மலரும்: அமைச்சர் சேகர்பாபு

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:48 IST)
சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் அதேபோல் ஈரோட்டில் சூரியன் தான் மலரும் என்றும் சூரியன் மேற்கில் உதிக்காது அதேபோல் சீமான் கட்சி ஜெயிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர் பேசிய போது சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் எனவே சூரியன் ஈரோட்டில் மலரும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பேன் என சீமான் கூறியது குறித்து கேட்டபோது ஏற்கனவே அதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன் மீண்டும் ஒரு பதில் தேவை இல்லை என்று கூறிய அவர் சூரியன் எப்போதும் மேற்கில் உதிக்காது அதுபோல் சீமான் கட்சியும் ஜெயிக்காது என்று தெரிவித்தார்.
 
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவருடைய அறிக்கையில் உள்ள ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments