Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ பேனா சிலையை வெச்சினா நான் வந்து உடைப்பேன்! – சீமான் எச்சரிக்கை!

Advertiesment
நீ பேனா சிலையை வெச்சினா நான் வந்து உடைப்பேன்! – சீமான் எச்சரிக்கை!
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:49 IST)
மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் பேனா சிலை அமைப்பத்தால் உடைப்பேன் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேனா சிலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கழிமுக பகுதியில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரிய ஆமைகளான பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவர் ரிட்லி ஆமைகள் வாழிடமாகவும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.


இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை கடலுக்குள் வைப்பதைதான் எதிர்க்கிறோம். அண்ணா அறிவாலயத்திலோ, கலைஞர் நினைவிடத்திலோ பேனாவை வைத்துக் கொள்ளலாமே! கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவ்வாறு கடலுக்குள் வைப்பதால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என அவர் பேசியபோது கீழிருந்து சிலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டலிட்டதால் சலசலப்பு எழுந்தது. அப்போது சிலையை வைத்தே தீருவோம் என்று கீழிருந்து ஒருவர் கூட்டலிடவே, “நீ சிலையை வைத்தால் நான் பேனா சிலையை உடைப்பேன்” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கோடீஸ்வரர் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி..!