Publish Date: Tue, 21 Mar 2017 (22:37 IST)
Updated Date: Wed, 22 Mar 2017 (10:42 IST)
அரசியல் என்பதும் அரசியல் கட்சி தொடங்குவதும் பதவிக்கு வருவதும் மக்களுக்கான சேவை என்பது காமராஜர் காலத்தோடு முடிந்துவிட்டது. இப்போது அரசியல் என்றாலே வியாபாரம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வது போல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதை உதாரணமாக கூறலாம்
இந்நிலையில் வரும் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற ரூ.100 கோடி செலவு செய்ய டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இன்று நாம் தமிழர் வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய சீமான், 'ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து ஆரம்பம் முதல் அனைவரும் கவனித்து வருகின்றனர். இதில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமரும் எண்ணத்தில் தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 10,000 கொடுக்க முன் வந்துள்ளனர். ஒரு ஒட்டுக்கு 10,000 என கணக்கு வைத்தால் 100 கோடி ரூபாய் வருது.
ஆனா இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் பணநாயகத்தை நம்புகின்றனர். ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கின்றோம். 234 தொகுதிகளில் களம் கண்ட நாங்கள், ஆர் கே நகரை விட்டு விடுவோமா என்ன என ஆவேசமாக பேசியுள்ளார்.