சர்வதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும்… சீமான் பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (12:38 IST)
அன்பான தன்னலமற்ற சர்வாதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியுள்ளார்.

நட்க்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் போது அவர் சர்வாதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும் என பேசியுள்ளார்.

அப்போது ‘நமது வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை சட்டம் போட்டு திருத்த முடியாது. ஒவ்வொருத்தரும் திருந்தினால்தான் முடியும். என் ஆட்சியில் ஊழல் செய்தால் நேராக டிஸ்மிஸ்தான். அவர்களின் 10 தலைமுறைக்கு அரசுப் பணி கொடுக்கமாட்டோம். தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments