Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

Advertiesment
seeman

BALA

, செவ்வாய், 6 ஜனவரி 2026 (19:41 IST)
நடிகர் விஜய் எப்போது அரசியல்வாதியாக மாறி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினாரோ அப்போது முதலே அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாம் கட்சி தமிழர் சீமான். துவக்கத்தில் விஜய் கட்சி தொடங்குவதற்கான அறிகுறி வந்த போது ‘தம்பி வரட்டும்’ என வாழ்த்து சொன்னார். விஜய் தன்னுடைய தலைமையை ஏற்பார்.. அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் எனவும் சீமான் கணக்கு போட்டதாக தெரிகிறது.

ஆனால் விஜய் எப்போது திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரோ அப்போது சீமானுக்கு விஜய் எதிரியாக மாறிவிட்டார். ‘ஒன்று அந்த பக்கம் நில்.. அல்லது இந்த பக்கம் நில்.. நடுவில் நின்றால் லாரி மோதி செத்துப் போவாய்’ என்றெல்லாம் காட்டமாக பேசினார் சீமான். மேலும் விஜய் ரசிகர்களை அணில் குஞ்சுகள், தற்குறிகள் என்றெல்லாம் மோசமாக விமர்சித்தார்.

இதனால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சீமான். இந்நிலையில்தான் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தற்போது பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறது. படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலைஇய்ல் இந்த படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம் கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சிந்தித்த சீமான் ‘என் தம்பி விஜய் எனக்கு எதிரியும் இல்லை.. போட்டியும் இல்லை. எனக்கு எதிரியே மற்ற பெரிய கட்சிகள்தான்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழுத்தம் கொடுக்கத்தான் செய்வார்கள்.. பாஜகவில் சேர வேண்டும் என எனக்கு கொடுக்காத அழுத்தமா?’ என்று விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார் மேலும் ‘பகவந்த் கேசரி படத்தை நான் பார்த்திருக்கிறேன்.. அந்த படத்தில் சென்சார் எதிர்ப்பது போல எந்த பிரச்சினையும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...