Publish Date: Wed, 28 Sep 2022 (17:12 IST)
Updated Date: Wed, 28 Sep 2022 (17:14 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைகோர்க்க இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் கலந்து கொள்ளும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் சீமான் கலந்து கொள்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்
ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் என்ற கேள்வி அரசியல் மத்தியில் எழுந்துள்ளது.