Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (11:34 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடியை "வெல்கம் மோடி" என்று வரவேற்கும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்தபோது "கோ பேக் மோடி"  என்று முழங்கியது சுயநலத்தின் உச்சம் என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது பெருமை என திமுக அமைச்சர் ஒருவர் கூறியுள்ள நிலையில், சீமான் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். "ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி என்று சொல்லும் திமுக, எதிர்க்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்று சொல்வது வாடிக்கைதான்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
"ஒருநாள் தமிழக அரசியல் அதிகாரம் எங்களிடம் வரும்போது உண்மையான விடியல் பிறக்கும்" என்று சீமான் உறுதியுடன் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதுள்ள ஆளும் அதிகாரம் தமிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்து வருகிறது என்றும், போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments