Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்.. ஆனால் அந்த கார் வேறு – சீமான் முழக்கம் !

Advertiesment
வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்.. ஆனால் அந்த கார் வேறு – சீமான் முழக்கம் !
, வியாழன், 28 நவம்பர் 2019 (08:17 IST)
மாவீரர் நினைவு நாளை நடந்த கூட்டத்தில் பேசிய சீமான் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம் என வரும் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான மாவீரர் நினைவு நாள்மதுரை ஒத்தக்கடை தெருவில் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவரது பேச்சின் ஒரு பகுதியாக ‘நாம் தமிழரை விட்டால் தமிழகத்துக்கு நாதி கிடையாது. ஏனெனில் எங்களைவிட இந்த மண்ணின் மக்களை நேசிப்பவர்கள் உலகத்திலேயே கிடையாது. ஏதாவது யுக்தி கண்டுபிடித்து மேலே வந்துவிடுங்கள் என நண்பர்கள் சிலர் என்னிடம் கூறுகின்றனர். அதனால் வரும் தேர்தலில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பதாக அறிக்கை வெளியிடவுள்ளோம். சீமான் கார் தருகிறார் என்று அனைவரும் எனக்கு வாக்களித்துவிடுவர். வெற்றி பெற்ற பின் ஒவ்வொரு வீடாகச் சென்று இதுதான்  கார் என்று ‘அம்பேத்கார்’. படத்தைக் காட்டி பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 குழந்தைகளை கொன்ற மனோகரனின் தூக்கு தண்டனை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு