Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவரை வெளியேற்றுவேன்: நாம் தமிழர் கட்சியின் சீமான்

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:42 IST)
நான் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சீமான் கடந்த சில நாட்களாக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஈரோடு தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்த போது பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்

தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத்தவர்கள் காரணமாகத்தான் குற்றங்கள் அதிகரிக்கிறது என்றும் வானதி சீனிவாசன் கோவையில் ஜெயித்ததற்கு காரணம் வட மாநிலத்தவர்கள் பதிவு செய்த வாக்குகள் தான் என்று தெரிவித்தார்

நான் தமிழகத்தில் ஆட்சி செய்தால் முதல் வேலையாக வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விடுவேன் என்றும் வட மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடும்ப அட்டையையும் திரும்ப பெற்று விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் சீக்கிரமே இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments