பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:32 IST)
தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், இந்த  நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி   வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட் பதிலளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
இந்த நிலையில்,  தனது மன்னிப்பை  ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து,  உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த  நிலையில், புதிய பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
 
நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தனது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments