Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சாகப்போகிறேன் என சிவராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்: சீமான்

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (17:51 IST)
நான் சாகப் போகிறேன் என ஏற்கனவே சிவராமன் தனக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் சிவராமனை காவல்துறையில் பிடித்து கொடுத்ததே நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்றும் சீமான் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக என்சிசி பயிற்சியாளர் என்று கூறப்படும் சிவராமன் கைது செய்யப்பட்டார். இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்ற நிலையில் அவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிவராமன் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறிய போது ’சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே நான் சாகப் போகிறேன் என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதி இருந்தார். எனது கட்சி தம்பிகளிடமும் அதை கொடுத்து விசாரிக்கச் சொன்னேன்.

தவறு செய்தது தெரிந்ததும் அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள் தான். குற்ற உணர்ச்சி இருந்ததால் தான் தற்கொலை செய்துள்ளார், மகன் செய்த தவறால் அடைந்த வேதனையில் தான் அவருடைய தந்தையும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இருவரது மரணத்திலும் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்