Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் மீது மதரீதியிலான தாக்குதல் நடத்துவதா? சீமான் கண்டனம்..!

Advertiesment
ஏ.ஆர்.ரஹ்மான் மீது மதரீதியிலான தாக்குதல் நடத்துவதா? சீமான் கண்டனம்..!
, புதன், 13 செப்டம்பர் 2023 (12:48 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் மீது மதரீதியிலான தாக்குதல் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 சமீபத்தில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான்  இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதும் ஏ ஆர் ரகுமான் மீது தனிப்பட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய போது ஆஸ்கார் விருது பெற்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திட்ட இசை தமிழன் ஏ ஆர் ரகுமான் மீது தனிப்பட்ட தாக்குதல் மற்றும் மதரீதியான தாக்குதல் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார். 
 
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் விளைந்த துயருக்கு ஏ ஆர் ரகுமானை மதரீதியாக சுருக்குவதும் தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிசெயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்: எடப்பாடி பழனிசாமி