Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா? சீமான்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (12:46 IST)
டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? என சீமான் கேள்வி. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0  என்ற வேட்டையை நடத்தியது. இந்த வேட்டையில் போதை பொருளான கஞ்சா மொத்ஹ்ட வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் இருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த செயலை பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, 
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்த செய்தி படித்தேன். பாராட்டுக்கள்! 
 
ஆனால் குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments