Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாட்டை துரைமுருகனை சந்தித்தார் சீமான்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (12:35 IST)
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகனை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 

 
கடந்த ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதற்காக யூட்யூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக பேச மாட்டேன் என அவர் உறுதியளித்ததன் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
ஆனால் சாட்டை துரைமுருகன் உறுதியளித்ததை மீறி அவதூறு கருத்துகளை பேசியதாக அரசு தரப்பு ஜாமீனை எதிர்த்து முறையீடு செய்தது, இதனால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த மதுரை கிளை நீதிமன்றம், மேலும் சேனல் ஒப்பந்த விதியை மீறினால் வீடியோவை நீக்கவும், சேனலை முடக்கவும் செய்யலாம். நடவடிக்கை எடுக்காவிட்டால் சமூக வலைதள நிறுவனமும் குற்றவாளியே. நடவடிக்கை எடுக்க தவறும் சமூக வலைதளங்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். பின்னர் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனைவு வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments