ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

Siva
வியாழன், 24 ஏப்ரல் 2025 (15:15 IST)
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பதை அடுத்து, மூன்றாவது அணி அமைக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சி இதுவரை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மூன்றாவது அணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், சென்னையில் ஓ.பி.எஸ் மற்றும் சீமான் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த பேச்சு வார்த்தையின் போது, இருவரும் தற்போது அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்கி, வரும் தேர்தலை எதிர்கொள்வார் என்றும், அவர் சீமான் கட்சியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்பு குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் தற்போது சந்தித்து உள்ளேன். இதில் அரசியல் எதுவும் இல்லை," என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments