Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நிற்க ஆசை! – சீமான் விருப்பம்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (13:00 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் நிற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வேகமாக தயாராகி வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் ஒரு தொகுதியில் இரண்டு வெவ்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் நின்றால் அது பெரும்பாலும் கவனம் ஈர்க்கும்.

முந்தைய தேர்தல்களை விட இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு சற்று கூடியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியானதால் பரபரப்பு எழுந்தது.

இதுகுறித்து சீமானிடம் கேட்டபோது “சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். நானும் நினைக்கிறேன்.” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவர் தனக்கும் விருப்பம் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர எதிர்த்து போட்டியிடுவதாக உறுதியாக சொல்லவில்லை என்பதால் தனக்கு சாதகமான தொகுதியிலேயே அவர் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments