Publish Date: Tue, 12 Sep 2023 (15:29 IST)
Updated Date: Tue, 12 Sep 2023 (15:31 IST)
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாதது குறித்து சீமான் விளக்க கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் விஜயலட்சுமி வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலை வழங்குமாறு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாகவும் சீமான் உறுதி செய்துள்ளதாகவும், ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டால் தான் விசாரணைக்கு ஒத்துழைக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர் காவல்துறைக்கு விளக்க கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் 12ஆம் தேதி அவர் ஆஜராக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது