Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுடுகாட்டுல பேசியிருந்தா 10 பொணத்தையாவது எழுப்பியிருக்கலாம்!.. சீமான பொலம்ப விட்டாங்களே!...

Advertiesment
seeman
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை துவங்கியவர்தான் சீமான். கட்சி தொடங்கியது முதலே திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். எங்களுக்கு திராவிடமே வேண்டாம்.. தமிழ் தேசியம்தான் வேண்டும் என மேடைகளில் முழங்கி வருகிறார்.

எனவே அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் சீமானின் பக்கம் சென்றனர். இதனால், அவரின் வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 8 சதவீதம் வரை சென்றது. அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறார்.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் வரை வாக்களிக்கிறார்கள்..

விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதைய்டுத்து கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னை திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்த சீமான் ‘நானும் 15 வருஷமா கத்துறேன்.. உன் காதில் வந்து விழமாட்டேங்குது.. உன்கிட்ட பேசறதுக்கு சுடுகாட்டில் பேசியிருந்தா 10 பொணத்தையாவது எழுப்பியிருக்கலாம்.. இந்த இனத்தை எழுப்புவது அவ்வளவு கஷ்டமா இருக்கு.. இதுவரை 36 லட்சம் பேரை எழுப்பியிருக்கேன்’ என பேசியிருக்கிறார். சீமானின் பேச்சில் தற்போதயெல்லாம் விரக்தி வெளிப்படுகிறது.. சில நாட்களுக்கு முன்பு கூட ‘என்னை விஷம் வச்சி கொன்னுடு.. இல்ல நாட்டை என்கிட்ட கொடு.. கத்தி கத்தி நான் சாகுறேன்’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொண்டர் கன்னத்தில் பளார் விட்ட திருமாவளவன்!.. தேனியில் பரபரப்பு!..