Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோடா பாட்டில் வீசினால் தானே தெரியும் சரியாக வீசுவாரா என்று?: கடுகடுத்த சீமான்!

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (16:56 IST)
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
 
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
ஜீயரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு ஜீயரை வச்சு செய்தனர். இதனையடுத்து ஜீயர் தனது பேச்சுக்கு ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி சீமான் பதிலளித்துள்ளார்.
 
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த சீமான், சோடா பாட்டில் எல்லாரும் வீசுவார்கள். ஆனால் யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும். ஜீயர் மன்னிப்பு கேட்டுவிட்டதால், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments