திருமாவளவனால் இதை செய்ய முடியுமா? சீமான் சவால்..!

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (08:15 IST)
குடிப்பெருமை பேசும் விசிக தலைவர் திருமாவளவன்  பொது தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் குடிப்பெருமை பேசும் விசிக தலைவர் கூறும்  திருமாவளவன்  அவர்களுக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். அவரால் ஒரு பொது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? திமுகவிடம் ஒரே ஒரு பொது தொகுதியை கூட வாங்க முடியாத திருமாவளவன், 16 பொது தொகுதியில் தனித்து போட்டியிட்ட என்னை சாதிப்பெருமை பேசுவதாக கூறுகிறார்.

மேலும் கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. எனவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். ஒருவேளை கூட்டணி அமைந்தால், அது மாற்றாக இல்லாமல், ஏமாற்றமாக இருக்கும்.

நான் நாங்கள் சண்டாளர் என்று பேசிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். சண்டாளர் என்ற சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது. சண்டாளன் என்பது கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடலை அதிமுகதான் வெளியிட்டது. இவ்வளவு வருடம் சண்டாளர் என்று சொல்லிய போது வலிக்காமல், இப்போது ஏன் திடீரென்று வலிக்கிறது. அந்த சமூகத்தினருக்கு கஷ்டமாக இருந்தால், சாணார், நாடார் ஆனதைப் போல, கள்ளர், மறவர் எல்லாம் தேவர் ஆனதைபோல வேறு பெயர் வைத்துக் கொள்ளலாமே? என்றும் சீமான் தெரிவித்தார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் திரிஷாவ விட்டுட்டு வரணும்!.. நயினார் நாகேந்திரனுக்கு பலரும் கண்டனம்!...

யுடியூப்பில் வியூஸ் வராததால் வீட்டை கொளுத்திய வாலிபர்!..

ஒருசில நிமிடத்தில் காலியான 10,000 காண்டம்கள்.. ஒலிம்பிக் போட்டி நடக்கும் கிராமத்தில் பரபரப்பு..!

எம்பிஏ மாணவியின் நிர்வாண சடலம் வகுப்பு தோழன் வீட்டில் மீட்பு.. தலைமறைவான நபர் யார்?

பீகார் போல் பணம் கொடுப்பது முக்கியமல்ல.. பீகாரை போல் தமிழ்நாடு இருக்கிறதா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments