Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: உலக நாடுகள் அதிர்ச்சி

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (08:07 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டிரம்ப் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அமெரிக்க காவல்துறைக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளிண்டன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது டிரம்ப் நலமாக இருக்கிறார் என அவரின் மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவரின் வலது காதில் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பை சுட்டதாக கூறப்படும் 2 நபர்கள் பாதுகாப்பு படையினரால்  சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்  துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டி அந்த ரத்த காயத்தோடு மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல் துணிச்சலாக சவால் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments