Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கிளாக தம்பிகளுக்கு தெம்பேற்றும் சீமான்: பிரச்சார லிஸ்ட் இதோ...

Advertiesment
சிங்கிளாக தம்பிகளுக்கு தெம்பேற்றும் சீமான்: பிரச்சார லிஸ்ட் இதோ...
, சனி, 5 அக்டோபர் 2019 (11:08 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் சீமான் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. இவர்களோடு நாம் தமிழர் கட்சியினரும் போட்டியிட உள்ளனர். சீமான் தனது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சீமான், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். இவரது பிரச்சார தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை இன்வருமாறு, 
webdunia
இன்று சனிக்கிழமை விக்கிரவாண்டியிலும், திங்கட்கிழமை நாங்குநேரியிலும், வெள்ளிக்கிழமை மீண்டும் விக்கிரவாண்டியிலும், அடுத்த சனிக்கிழமை மீண்டும் விக்கிரவாண்டியியும், அடுத்த திங்கட்கிழமை மீண்டும் நாங்குநேரியிலும், 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நாங்குநேரி, 16 ஆம் தேதி புதன்கிழமை அன்று புதுச்சேரி காமராஜ் நகர், 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று விக்கிரவாண்டி, 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாங்குநேரி தொகுதியிலும் பரப்புரை மேற்கொள்ளயுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகியா?? கொந்தளிக்கும் பிரபலங்கள்