எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

Mahendran
சனி, 31 மே 2025 (14:25 IST)
எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கூறி, ஆதவ் அர்ஜுனா என்னை கூட்டணிக்கு அழைத்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரண்டு மாபெரும் கூட்டணிகள் போட்டியிட உள்ளன.
 
இந்த நிலையில், புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யின் "தமிழக வெற்றி கழகம்" ஒரு தனி கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே, தனித்து போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து விட்டதால், அவர் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும், தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சியை கூட்டணியாக இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
அதேபோல், அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் தமிழக வெற்றி கழகம் சேரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘அதிமுக கூட்டணிக்கு தன்னை வருமாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆதவ் அர்ஜுனா அழைத்தார் என்றும், தனக்கு துணை முதல்வர் பதவி வாங்கித் தருவதாக கூறியதாகவும், சீமான் கூறினார்.
 
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments