Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''உங்கள ஆளையே காணாமே!! எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கீங்களா சீமான்''- திமுக நிர்வாகி டுவீட்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (16:14 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆணையம் உண்மைத் தகவல் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு திமுக பிரமுகர்  சீமானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து,  நீதியரசர் அருணா  ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த  நிலையில், முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருந்து அக்கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ள ராஜீவ்காந்தி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆணையம் உண்மைத்தகவல் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு சீமானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், Mr.@SeemanOfficial தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உங்க சித்தப்பு பழனிச்சாமியும்,ஜெயலலிதா இறப்பில் உங்க சின்ன அத்தை சசிக்கலாவும் செய்த சதி வேலைகளை விசாரணை ஆணையங்கள் அம்பலபடுத்தியுள்ளது!!!

உங்கள ஆளையே காணாமே!! எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கீங்களா சீமான்!!! என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆனபின், சென்னை –  தி நகர் இல்லத்தில் ,அவரை சீமான் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments