சமீபத்தில் சட்டசபையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஊழியர்களுக்கு இருக்கை அமைக்க வேண்டும் என்று சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது எனவும் செப்டம்பர் 13-ஆம் தேதி இந்த சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் திட்டகுடி கணேசன் அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்த அறிவிப்புக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்காடி தெரு படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு இது குறித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் . கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் மசோத நிறைவேற்றப்பட்டது.