நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளராக சீமான் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அன்றைய கூட்டத்தில், நெய்தல் படை அமைத்து அதன் மூலம் 15000 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுப்பேன் என பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதேபோல் நாம் தமிழர் என்ற கட்சியின் நிர்வாகிகளின் வீட்டில் கடந்த 2 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜாரானது குறிப்பிடத்தக்கது.