Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

Advertiesment
Scrub Typhus

Prasanth Karthick

, வியாழன், 2 ஜனவரி 2025 (15:27 IST)

ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

 

 

தமிழகத்தில் சமீபமாக ஸ்க்ரப் டைபஸ் என்ற தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தொற்றானது Orientia Tsutsugamushi என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பால் உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் ஏற்படும். இந்த ஒட்டுண்ணியால் விவசாய தொழில் செய்பவர்கள், புதர் மண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

இந்த ஸ்க்ரப் டைபஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, தலை வலி, கருப்பு நிற கொப்புளங்கள் ஏற்படும். 5 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இருந்தாலோ, கருப்பு கொப்புளங்கள் ஏற்பட்டாலோ மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

 

தற்போது இந்த தொற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவாட்ரான்டிட்ஸ்: இந்தாண்டின் சிறந்த எரிகல் பொழிவை எப்போது பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?