Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு ரிசல்ட்டுக்கு பிறகுதான் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (11:20 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தேர்வு முடிவகளுக்கு பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம்  முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மொத்தமாகவும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கான தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் ஜூன் 15 முதல் தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளனர்.

மாணவர்கள் தேர்விற்கு சென்று வர பேருந்துகளை ஏற்பாடு செய்வது, விடுதிகளை திறப்பது, முகக்கவசங்கள் அளிப்பது என அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அவர்களுக்கு ரிசல்ட் வெளியான பிறகுதான் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் காலதாமதமாக பள்ளிகள் தொடங்குவதால் மாணவர்களுக்கு பாடங்களை குறைப்பது குறித்து கல்வியியல் வல்லுனர்களை கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அதிகரிக்கும் சுற்றுலா பயணம்! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! - முழு விவரம்

சித்தராமையா பேச்சை தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான்.. பாஜக கடும் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments