Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியை அடுத்து மேலும் சில மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (07:44 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இதனை அடுத்து ஒரு சில பகுதிகளில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை அடுத்து தற்போது தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரிகள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
மேலும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கொடைக்கானல் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments