தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறையா...? அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (13:11 IST)
புதுவையில் தீபாவளிக்கு மறுநாள் ஆனால் அக்டோபர் 25-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் அதேபோல் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தீபாவளித் திருநாளான 24ஆம் தேதிக்கு மறுநாள் 25-ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் வேலை நாள் என்பதால் வெளியூர் சென்றவர்கள் தீபாவளி அன்று இரவே திரும்ப வேண்டிய நிலையில் உள்ளது
 
இதனை கணக்கில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுவை அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் தமிழகத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் முதலமைச்சர் உடன் கலந்து ஆலோசித்து தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments