Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (12:36 IST)
தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.


இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர தனியார் பேருந்துகள் பலவும் முழுவதும் புக் ஆகியுள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் செல்ல 1,66,659 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments