Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran
புதன், 13 மார்ச் 2024 (17:17 IST)
முக்கிய விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் போது ஒரு சில மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நாளை விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். 
 
இதன் காரணமாக நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புர மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 14 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
 
மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 23ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments