தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்படாது:முதல்வர் மு.க ஸ்டாலின் பேட்டி

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (14:07 IST)
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என டெல்லியில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்துள்ளார் 
 
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே ஆசிரியர் சங்கம் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அரசிடம் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் 
 
இந்த நிலையில் இன்று குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி சென்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் இப்போது திறக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார் 
 
பள்ளி கல்லூரிகளை தற்போது கிடைக்கும் சூழல் இல்லை என்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments