Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (13:40 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்ய உள்ளார்.
 
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி
அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
 
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று: 03/12/2024 . பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்ை டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேரா போய் நிவாரணம் கொடுத்தா ஆகாதா? விஜய் வழங்கிய நிவாரண உதவி குறித்து நெட்டிசன்கள் கேள்வி!

பிரதமர் - முதல்வர் உரையாடல் எதிரொலி: தமிழகம் வருகிறது ஆய்வுக்குழு..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை..!

பாதிப்பை பார்க்க சென்ற அமைச்சர் பொன்முடி! சேற்றை வீசி அனுப்பிய மக்கள்! - விழுப்புரத்தில் பரபரப்பு!

அணையை திறக்கும் முன் 5 முறை எச்சரிக்கை விட்டோம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments