Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை.. மகளிர் குழுக்கள் மூலம் தையல் பணி.. தமிழக அரசு

Tailor machine

Mahendran

, புதன், 22 மே 2024 (16:26 IST)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக  சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
 
இந்த திட்டம்  வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி பெண் தையலர்களுக்கு கிடைக்கும். பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபுல் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் அசத்தலான ஆப்ஷனில் வெளியான Realme GT 6T! ஆப்ஷன்ஸ் எப்படி இருக்கு?