Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவம்!

J.Durai
சனி, 22 ஜூன் 2024 (12:25 IST)
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில்  இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 
 
இங்கு  1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின் போது 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே தண்ணீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவும் போது , மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிவடைந்தவுடன் பள்ளி எதிரே இருக்கும் காலியான இடத்தில் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டு தகாத வார்த்தையால் திட்டி அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
மேலும், இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கள்ளிக்குடி காவல் துறையினர் பள்ளி இயங்கும் நேரம், முடிவடையும் நேரங்களில் இப்பகுதியில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு பணியில்  ஈடுபட வேண்டும் என ,அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இச்சம்பம் குறித்து, கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

நான் திமுகவின் ஸ்லீப்பர்செல்லா? ராஜ்யசபா சீட் கேட்டதால் வந்த வினை..! - மல்லை சத்யா வேதனை!

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

அடுத்த கட்டுரையில்
Show comments