Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசிப்பில் இறங்கிய மணமகன் - மணமகனின் டிரம்ஸ் வாசிப்பில் மயங்கிய மணப்பெண்!

Advertiesment
திருமண நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசிப்பில் இறங்கிய மணமகன் - மணமகனின் டிரம்ஸ் வாசிப்பில் மயங்கிய மணப்பெண்!

J.Durai

மதுரை , வெள்ளி, 14 ஜூன் 2024 (10:05 IST)
மதுரை கிரைம் பிரான்ச் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில், திருமணம் முடிக்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர்.
 
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் முடித்த கையோடு  மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில்,பேண்ட் வாத்தியம் வாசிக்கப்பட்டது. அப்போது, திடீரென் களத்தில் இறங்கிய மணமகன் மகேஷ் குமார் ட்ரம்ஸ் வாசிப்பில் ஈடுபட்டார். 
 
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் என்ற பாடலுக்கு தனக்கே உரிய பாணியில் டிரம்ஸ் வாசித்தார். 
 
பின்னர் ரோஜா.... ரோஜா...." என்ற பாடலுக்கும் டிரம்ஸ் வாசித்தார். மணமகன் டிரம்ஸ் வாசித்த வாசிப்பில் மயங்கிய மணமகள் யுவராணி மணமகனையே வியந்து பார்த்தது அங்கிருந்தவர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
திருமணம் முடிந்த கையோடு மணமகன் டிரம்ஸ் வாசிப்பில் ஈடுபட்ட சம்பவம் திருமண 
வீட்டார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்..