Publish Date: Mon, 02 Jan 2023 (16:54 IST)
Updated Date: Mon, 02 Jan 2023 (16:58 IST)
பள்ளிக்கு வெளியே கேட்ட திடீர் சத்தம்: அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மாணவன்!
பள்ளிக்கு வெளியே திடீரென சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மாணவர் ஒருவர் மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை செய்து வரும் சம்பவம் தூத்துகுடி அருகே நடந்துள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருச்செந்தூர் மாவட்டம் தூத்துக்குடி அருகே உள்ள பள்ளியில் வெளியே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
இந்த வெடிச்சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ஒரு மாணவர் மயங்கி விழுந்ததாகவும் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த வெடிச்சத்தம் எங்கிருந்து வந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிச்சத்தம் அதிர்ச்சியில் மாணவர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது