Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல்போன பள்ளி மாணவன் கிணற்றிலிருந்து பிணமாக மீட்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (08:11 IST)
சங்கரன்கோவிலில் பகுதியில் மாயமான பள்ளி மாணவன், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன்.
இவருடைய மகன் ஆனந்த்.
 
13 வயதுடைய ஆனந்த் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆனந்த், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
 
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் ஆனந்தை தேடினர். ஆனால் ஆனந்த் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் அருகில் இருந்த கிணன்றில் ஆனந்த் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், அந்த மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments