Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சக மாணவனை பிளேடால் வெட்டிய மாணவன் – மதுரைப் பள்ளியில் நடந்த சாதியக் கொடுமை !

Advertiesment
சக மாணவனை பிளேடால் வெட்டிய மாணவன் – மதுரைப் பள்ளியில் நடந்த சாதியக் கொடுமை !
, சனி, 12 அக்டோபர் 2019 (17:06 IST)
மதுரையில் சாதியின் பெயரை சொல்லி சகமாணவன் ஒருவனை மாணவன் பிளேடால் முதுகில் வெட்டியுள்ள சமபவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார், பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 11.10.2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன் மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர்.

இதை சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரை பார்த்து ஏண்டா நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா என்று கூறியதும் மட்டுமல்லாமல் சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளிலும் பேசி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.

தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சமீப காலங்களில் பள்ளிகளில் அதிக அளவிலான சாதியக் கொடுமைகள் நடந்து வருவது வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் தவறானப் பாதையில் செல்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கரை ஒதுங்கும் பாகிஸ்தான் படகுகள்: எல்லையில் பதற்றம்!