வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.. பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகுமா?

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (08:35 IST)
கோடை விடுமுறை முடிந்த ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் ஏழாம் தேதி அதாவது வரும் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் மே மாதம் போலவே ஜூன் மாதமும் கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள் மேலும் ஒரு வாரம் திறப்பது ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறிய போது மேலும் ஒரு வாரம் பள்ளி திறப்பது ஒத்திவைக்கப்படுவது குறித்த எந்த முடிவையும் இப்போதைக்கு கல்வித்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தி அதன் பிறகு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பது தாமதம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 
 
இன்று அல்லது நாளை இது குறித்த முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments