Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (11:01 IST)
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று தென் மாவட்டங்களான 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கனமழை பெய்யும் 7 மாவட்டங்களில் திங்கட்கிழமை இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
அதன்படி நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒரு நாள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments