Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: காப்பக நிர்வாகி, வார்டன் கைது

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: காப்பக நிர்வாகி, வார்டன் கைது

Advertiesment
பள்ளி மாணவி
, திங்கள், 25 ஏப்ரல் 2016 (13:23 IST)
8ஆம் வகுப்பு மாணவியிடம் தாங்கள் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்க்குமாறு கூறி, பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகியையும் பெண் வார்டனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கோயம்புத்தூர் கணபதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒருவரது 14 வயது மகள், கடந்த ஓராண்டாக விளாங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவந்தார்.
 
இந்நிலையில், அந்த மாணவி கடந்த சில மாதங்களாக படிப்பில் நாட்டம் இன்றி சோர்வாகவும் பீதியுடனும் இருந்ததைதாகக் கூறப்படுகின்றது.
 
இதனால் பள்ளி தலைமை ஆசிரியர், அந்த மாணவியை அழைத்து விசாரித்தபோது, அப்போது பல அதிர்ச்சித் தகவலை அந்த மாணவி கூறியுள்ளார்.
 
இது குறித்து அந்த மாணவி கூறியதாவது:–
 
நான் தங்கியுள்ள காப்பகத்தின் நிர்வாகியாக ஜெகன் என்பவரும், வார்டனாக சித்ரா என்ற பெண்ணும் உள்ளனர்.
 
ஜெகனுக்கும், வார்டன் சித்ராவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
 
கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் உல்லாசமாக இருக்கும்போது, அதை நான் பார்க்கும்படி கொடுமைப்படுத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, என்னையும் இதில் ஈடுபடும்படி பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதனால் எனக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல்போனது. இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
 
இது குறித்து அந்த மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
 
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மாணவி கொடுத்த புகார் உண்மை என்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. 
 
இதைத் தொடர்ந்து, காப்பக நிர்வாகி ஜெகன், வார்டன் சித்ரா ஆகியோரை காவல்துறையினர் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

Share this Story:

Follow Webdunia tamil