Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை கடத்தி 1 மாதம் வரை பலாத்காரம் செய்த கும்பல்!

பள்ளி மாணவியை கடத்தி 1 மாதம் வரை பலாத்காரம் செய்த கும்பல்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (17:48 IST)
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் 15 வயதான பள்ளி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி ஒரு மாதம் வரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
மினாசோட்டாவின் அலெக்சாண்டிரியா பகுதியை சேர்ந்த 15 வயதான ஜாஸ்மின் பிளாக் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி தனது குடியிருப்பின் அருகில் வைத்து குடும்ப நண்பர் ஒருவரால் காரில் கடுத்தப்பட்டார்.
 
மாணவி கடத்தப்பட்ட அன்று காரில் வந்த தாமஸ் என்பவர் தனது குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றும் அதனை தன்னுடன் வந்து தீர்க்க வர வேண்டும் என ஜாஸ்மினிடம்  அவர் கூறியுள்ளார். இதனை நம்பி ஜாஸ்மின் அவருடன் காரில் ஏறி சென்றுள்ளார்.
 
ஜாஸ்மின் காரில் ஏறியதும் அந்த நபர் ஆயுதம் காட்டி மிரட்டி அவரை மறைவான இடத்துக்கு கொண்டு சென்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தொடர்ந்து 29 நாட்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சுற்றுவட்டாரத்தில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அந்த மாணவியை கிராண்ட் கௌண்டி பகுதியில் உள்ள ஒரு ஏரி அருகில் உள்ள குடியிருப்பில் பூட்டி வைத்தனர்.
 
அதன் பின்னர் அந்த மாணவி வாய்ப்பு கிடைத்த போது அங்கிருந்து தப்பித்து ஏரி ஒன்றினை நீந்தி கடந்து விவசாயி ஒருவரின் துணையுடன் அங்கிருந்து தப்பி தனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில் அந்த மூவரினையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்