Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை – பள்ளி மாணவியின் விபரீத முடிவு!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:37 IST)
ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளைக் கவனிப்பதற்கு செல்போன் இல்லாத காரணத்தால் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது. பல வீடுகளில் இன்னமும் செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரின் பொருளாதார சூழல் உள்ளது.

இந்நிலையில் சென்னை ராமாவரத்தைச் சேர்ந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சின்னையா என்பவரின் மகள் யாமினி ( 17) தனது பெற்றோரிடம் செல்போன் கேட்டுள்ளார். அவர்கள் இன்னும் சில நாட்களில் வாங்கித் தருவதாக சொல்லியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது அவரது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தற்கொலை தமிழகத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments