Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பிரச்சினைக்காக பள்ளியை மூடினால் அதிரடி நடவடிக்கை – பள்ளிக் கல்வி துறை

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (16:53 IST)
தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் கடும் நீர் வறட்சியின் காரணமாக வீடுகளுக்கு நீர் கிடைப்பதே பெரும் சவாலாக உள்ளது. பள்ளிகளின் நிலையோ அதைவிட மோசம். பல தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து வரும்போதே தண்ணீர் பாட்டில்களை கொடுத்து விடுமாறு தெரிவித்திருக்கின்றன. இதுதவிர கழிப்பிடங்களுக்கான தண்ணீர் தேவைக்கு அவ்வபோது வரும் டேங்கர் லாரிகளை நம்பியிருக்கும் நிலை உள்ளது. இதனால் சில பள்ளிகள் அடிக்கடி குழந்தைகளுக்கு விடுமுறை அளிப்பதும், வகுப்புகளை ரத்து செய்வதும் தொடர்ந்து வந்துள்ளது.

இதையறிந்த பள்ளிக் கல்வி துறை ”தண்ணீர் பிரச்சினையை காரணமாக சொல்லி எந்த தனியார் பள்ளியும் விடுமுறை அளிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது. தண்ணீருக்கு தேவையான வேறு ஆதாரங்கள் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்ந்த பிறகே பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் முறையாக செயல்படுகிறதா?, அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றனவா? என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments