Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் விவகாரத்தில் தமிழகத்தை கைவிட்ட உச்ச நீதிமன்றம்

நீட் விவகாரத்தில் தமிழகத்தை கைவிட்ட உச்ச நீதிமன்றம்
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:41 IST)
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.


 

 
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் வரையை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்பித்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க தயாராக இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
 
இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாப்பு வகையில் முடிவு எடுகப்பட வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வின் அடிப்படையில்தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறந்த வெளியில் மலம் கழித்த கிராம மக்கள் கைது