Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

SBI வங்கியில் 2000 Probationary Officer பணியிடங்கள்! – உடனே அப்ளை பண்ணுங்க!

Advertiesment
SBI
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (12:39 IST)
இந்திய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கிகளில் Probationary Officer பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இந்திய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில் முன்னணியில் உள்ளது. இந்த வங்கியில் தகுதிகாண் அதிகாரி (Probationary Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 2000 பணியிடங்களில் பொது இடங்கள் – 810, எஸ்சி – 300, எஸ்டி – 150, ஓபிசி – 540, EWS – 200 என இடஒதுக்கீடுகள் பகிரப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 01.04.2023 கணக்கின்படி விண்ணப்பிப்பவர் 21 வயதுக்கு குறையாமலும் 30 வயதை தாண்டாதவாராகவும் இருத்தல் வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். Premilinary Exam, Main Exam, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் ஆகிய முறைகளின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலதிக விவரங்களுக்கு SBI வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினை காண்க.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைக்கு விலை பேசும் சாமியார் மேல் நடவடிக்கை இல்லை..! – உதயநிதிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அறிக்கை!