சென்னையில் சில ஏடிஎம் மையங்களில் 1.5 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம், சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து வடமாநில கொள்ளை கும்பல் ரூ.10 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொள்ளையர்களின் நூதனமான முறை பற்றி போலிஸ் தெரிவித்துள்ளார். அதில் பணத்தை எடுக்கும் போது வெளியே வரும் பணத்தை எடுக்காமல் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஏடிஎம் பணத்தை உள்ளே இழுத்துக்கொள்ள முயலும் போது கையால் ஷட்டரை நிறுத்தியுள்ளனர். இதனால் சென்சார் செயலிழக்க, பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து எடுக்காதது போலவே இருக்கும். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். என போலிஸார் கூறியுள்ளனர்.