Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக அபிமானி ஜாபர்சேட் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

திமுக அபிமானி ஜாபர்சேட் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

திமுக அபிமானி ஜாபர்சேட் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
, செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (21:18 IST)
முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 

 
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உளவுப் பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். இவருக்கு அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தனி செல்வாக்கு இருந்தது. 
 
இதனால், அதிமுக ஆட்சி அமைந்த உடன்  ஜாபர்சேட், மண்டபம் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக தூக்கி அடிக்கப்பட்டார்.
 
மேலும், ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது விடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. பின்பு, ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. 
 
இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, ஜாபர்சேட் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.
 
இதனை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தும் அவருக்கு மீண்டும் பணிவழங்க  உத்தரவிட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil